Golden Jubilee Celebrations - Celebrating 50 Years

The College – A Portrayal

Government Polytechnic College for Women (GPCW) functions under the authority of Directorate of Technical Education, Government of Tamil Nadu and affiliated to AICTE.

Established in the year 1964 with just 40 students in two courses viz. Diploma in Civil Engineering and National Diploma in Commercial Practice, this college now in its 50th year of existence, stands tall as a prestigious institution with 7 branches of study with over 1200 students.

Located in the heart of the city in a sprawling 10 acre campus amidst green environ, our college is a big attraction to women from both urban and rural areas. Catering to the needs of women, especially the downtrodden, it quenches their thirst for technical and commercial skills and know-how.

In its giant strides during its history of five decades, it has grown in leaps and bounds taking along the society, especially the women, empowering them technically, making them economically independent to be viable and equal partners to men both in family and profession. Through devoted service the institution not only provides students with opportunities to develop skills but also develop the right attitudes to function successfully in the ever competing world.

By the concerted efforts of the past and present faculty, the institution today stands as a pioneering and prestigious institution echoing the voice of women in the Kongu region.

Tuesday, 18 February 2014

Placement News

The following students are provisionally
 shortlisted  for Toyota Tsusho Group, Chennai


K SARANYA
DME
R PARAMESWARI
DECE
S GOWTHAMI
DECE
R PRIYANKA
DECE
C KASTHURI
DECE
B HEMALATHA
DECE
R REVATHI
DECE
C SIVAGOWRI
DECE
S NIROSHA
DECE
R LAKSHMIPRIYA
DECE
R VINOTHINI
DECE
N NANDHINI
DECE
R RETHIKA
DME
K ANUPRIYA
DECE


Hearty wishes to the above students for their bright future!


 Thiru B.Senthilkumar, M.Com., M.Phill
 Placement  Section Incharge
 Lecturer/Commerce
 Contact  Email Id: sent_accountancy@yahoo.co.in
 Mobile No: 90430 23344

Wednesday, 5 February 2014

Indira Gandhi DOTE Award for the Best NSS Unit - 2012-13


             2012-13 ம் ஆண்டிற்கான இந்திராகாந்தி - தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் வழங்கும் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலகிற்கான விருதினை அரசினர் மகளீர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை நாட்டு நலப்பணித்திட்டப் பிரிவு பெற்றுள்ளது. மாநில அளவில் வழங்கப்படும் இவ்விருதினை இந்த ஆண்டு இரண்டு பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மட்டுமே பெற்றுள்ளன. இதில் முதல் இடத்தினை இக்கல்லூரி வகிக்கிறது.
              
               இதற்கான விருது வழங்கும் விழா சென்னை தொழில்நுட்பக்கல்வி இயக்கத்தில் 04-02-2014 அன்று நடைபெற்றது. விருதினை இக்கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் எல். ராகவேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்


.          இப்பயில முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவிகள் சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கும், நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகளுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

விழிப்புணர்வு பேரணி



கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், மகளிர் உரிமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பேரணி நடைபெற்றது. கோவை மாவட்ட வருவாய் அதிகாரி கற்பகம் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.


பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, பாலசுந்தரம் ரோடு வழியாக வ.உ.சி. பூங்கா வரை சென்று மீண்டும் பாலசுந்தரம் ரோடு வழியாக பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. அப்போது பெண்களின் பெருமைகளை போற்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தியவாறு பேரணியாக வந்து, பெண்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி முதல்வர் ஏ.கவுசியா ஜெபின், துணை முதல்வர் ரவீந்திரன், ஆசிரியர்கள், 480 மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொன்விழா ஆண்டு

இது தொடர்பாக முதல்வர் ஏ.கவுசியா ஜெபின் நிருபர்களிடம் கூறியதாவது:–

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி கோவையில் கடந்த 1964–ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நடப்பு ஆண்டுடன்(2014) பாலிடெக்னிக் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அமைப்பியல் மற்றும் தேசிய வணிகவியல் ஆகிய 2 பட்டய படிப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில், தற்போது 7 பட்டய படிப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டயப்படிப்பு மட்டும் அல்லாது சமுதாயத்தை முன்னேற்றும் வகையில், பாலிடெக்னிக் வாயிலாக சமுதாய மேம்பாட்டு திட்டம், கனடா–இந்தியா கூட்டுறவு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மகளிர் உரிமைகள்

பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, மகளிர் உரிமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களிடையே வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இன்று சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைப்பதில்லை. இதேபோல் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி 

நாட்டு நலப்பணித்திட்டம்

இக்கல்லூரியில்  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராக  பணிபுரியும் டாக்டர் எல். ராகவேந்திரன் அவர்கள் மாநில அளவில் சிறந்த திட்ட அலுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு , அவருக்கு தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது


விருது பெற்ற டாக்டர் எல்.ராகவேந்திரன் அவர்களுக்கு இக்கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, 4 February 2014

பொன் விழா ஆண்டு 2014

அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, கோவை 641044
பொன் விழா ஆண்டு 2014
     அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி 1964ம் ஆண்டு, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மகளிரின் முன்னேற்றத்திற்காக  கோவை, அரசு பொறியியற் கல்லூரி வளாகத்தில் அமைப்பியல் பட்டயப்படிப்பு மற்றும் தேசிய வணிகவியல் பட்டயப்படிப்பு ஆகிய இரு துறைகளுடன் துவக்கப்பட்டது. பின்னர் 1969ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட தற்போதய வளாகத்திற்க்கு மாற்றப்பட்டது.
      அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று தற்சமயம் முதல் ஆண்டில் 380 மாணவியர் மற்றும் நேரடியாக  இரண்டாம் ஆண்டில் 76 மாணவியரும் சேர்க்கப்படுகின்றனர். இதன்படி மொத்தம் 1292 மாணவியர் தற்போது பயன்பெற்று வருகின்றனர். மேலும் மத்திய  அரசின் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  மாற்றுத் திறனாளிகளும் மூன்றாண்டு பட்டயப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இக்கல்லூரியில் தற்போது கீழ்க்காணும் ஏழு பட்டயப் பிரிவுகள் உள்ளன.
1.   அமைப்பியல்
2.   இயந்திரவியல்
3.   மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
4.   கருவியியல் மற்றும் கட்டுப்பாடு
5.   கணிணி
6.   ஆடைத் தொழில் நுட்பம்
7.   மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ்
       இப்பயிலகத்தில் பயின்ற  முன்னாள் மாணவிகள் பலர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுப் பணிகளில் மிகப்பெரிய அளவில் பணி புரிந்து இப்பயிலகத்திற்க்கு மென்மேலும் சிறப்பு சேர்த்து வருகின்றனர்.
      இக்கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் இதே தொழில் நுட்பக் கல்வித்துறையில் பணியில் சேர்ந்து, இக்கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பது  மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
      மேலும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் உதவியுடன்  இப் பயிலகத்தில் கீழ்க்காணும் திட்டங்கள்  சமுதாய முன்னேற்றத்திற்காகவும் நாட்டு வளர்ச்சிக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது.  
  • பாலிடெக்னிக் வாயிலாக சமுதாய மேம்பாட்டுத் திட்டம்
  • கனடா இந்தியா கூட்டுறவு திட்டம்
  • மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டம்
      இத்திட்டங்களில் பயின்ற பல மாணவியர் சுய தொழில் துவங்கி மிகச்சிறந்த முறையில் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டுள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
      இக்கல்லூரி துவங்கி 50 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இப்பயிலகத்தில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் 2014ம் ஆண்டில் தொடர்ச்சியாக வடிவமைக்கப்பட்டு, பல்வேறு போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
      இதன் ஒரு பகுதியாக 04-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலை  ”மகளிர் உரிமைகளும்  பிரச்சனைகளும்” ( Women Rights and Issues ) என்ற தலைப்பின் கீழ் மக்கள் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இப்பேரணி பயிலகத்திலிருந்து துவங்கி வ.உ.சி.பூங்கா வரை சென்று முடிவடையவுள்ளது, இப்பேரணியில், இக்கல்லூரியில் பயின்று தற்போது பல்வேறு துறைகளில் முன்னணியில் பணியாற்றிவரும் முன்னாள் மாணவிகள் பலரும் பங்கேற்க உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
      மேலும் இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர்கள் இந்த பொன் விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் இக்கல்லூரி முதல்வரை தொடர்பு கொள்ளவும் இச்சிறப்பான தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.


                                                 அ.கெளசியா ஜபீன்

                                                    முதல்வர்.